ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிசோதனையை நிறுத்த அறிவுரை

தினமலர்  தினமலர்
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிசோதனையை நிறுத்த அறிவுரை

ஜெனிவா: முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த வாரம் தி லான்செட் பதிப்பகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த மருந்து பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுப்பதையும், மருத்துவ பரிசோதனைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு டெட்னோம் தெரிவித்தார்.



தி லான்செட் நடத்திய ஆய்வில் 96 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை கொரோனா நோயாளிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. மாறாக இதய பிரச்னை உள்ளிட்ட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

மூலக்கதை