ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் தேவை சீர்குலைந்துள்ளது. 2020-2021ம் ஆண்டு வளர்ச்சி எதிர்மறையாக சென்று கொண்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பின்னர், பிரதமர் மோடி அதிக பண புழக்கத்தை ஏன் உட்செலுத்துகிறார்? ‘கடமையை செய்யுங்கள்; நிதி நடவடிக்கைகளை எடுங்கள்’ என அரசுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் மூடி மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி அறிக்கைக்கு பின்னரும், பிரதமர் அல்லது அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாங்கள் அறிவித்த 20 லட்சம் கோடி திட்டத்தை பற்றி தான் பேசுகிறார்கள். அவர்கள் அறிவித்த நிதி தொகுப்பானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு சதவீதத்துக்கும் குறைவானது. நாட்டின் வளர்ச்சியை பாதகமான நிலைக்கு இழுத்து சென்ற மத்திய அரசை நினைத்து ஆர்எஸ்எஸ் தான் வெட்கப்பட வேண்டும்,என்று கூறியுள்ளார்.

மூலக்கதை