சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: கவர்னர்களுக்கு டிரம்ப் உத்தரவு

தினகரன்  தினகரன்
சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: கவர்னர்களுக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்:  ‘அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும் சர்ச் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்,’ என்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.  அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு 97 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. எனினும், நோய் தாக்கம் குறைந்துள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 3 வாரங்களாக பல நகரங்களில் பொதுமக்கள் பணிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாகாணங்களிலும் உள்ள சர்ச் மற்றும் இதர வழிபாட்டு தலங்களை திறக்கும்படி அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை ேநற்று சந்தித்த அதிபர் டிரம்ப், “அனைத்து மாகாணங்களிலும் சர்ச் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க கவர்னர்கள் அனுமதிக்க வேண்டும். கவர்னர்கள் சரியானதை செய்ய வேண்டும். நம்பிக்கை மிகுந்த மிக அத்தியாவசியமான பிரார்த்தனை இடங்கள், இந்த வார இறுதியில் திறக்கப்பட வேண்டும்,” என்றார்.

மூலக்கதை