இனிமே ஊரடங்குன்னு யாராவது பேச்ச எடுத்தீங்க...கடுப்பில் டிரம்ப்

தினகரன்  தினகரன்
இனிமே ஊரடங்குன்னு யாராவது பேச்ச எடுத்தீங்க...கடுப்பில் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.உலக நாடுகளில், அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம் (16.20 லட்சம் பேர்). அதேபோல், பலி எண்ணிக்கையும் (96,364 பேர்) இந்நாட்டில்தான் அதிகம். அங்கு தாமதமாகத்தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும்கூட இதற்கு மக்கள் மற்றும் பெருநிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலம், இந்த ஊரடங்கால், பல்வேறு நாடுகளை போன்று அமெரிக்காவிலும் பெரருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலை இழந்தோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.இதனால் அதிபர் டிரம்ப் உடனடியாக பொருளாதாரத்ைத மீட்ெடடுக்க, ஊரடங்கு உத்தரவில் பல்வேறு சலுகைகளை அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். ஆளானப்பட்ட அமெரிக்காவே ஊரடங்கால் சூடுபட்டதை பார்த்த பின்னர்தான், பல்வேறு நாடுகள் தங்கள் ஊரடங்கில் பல சலுகைகளை அறிவிக்க ஆரம்பித்தன. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது மிக மெதுவாக பாதிப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது. எனினும், அந்நாட்டில் இரண்டாவது முறையாக கொரோனா பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். பொருளாதார திறப்பு நடவடிக்கை காரணமாக, இரண்டாவது அலை வீசக்கூடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையே, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கொரோனாவின் இரண்டாவது அலை வந்தாலும், நாட்டை இனி முடக்கப் போவது கிடையாது.. நாடு ஒன்றும் மூடி போட்டு மூடுவதற்கான பொருள் இல்லை. இது ஒரு ஆரோக்கியமான விஷயமும் கிடையாது’’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை