கேரளாவில் 7 சுகாதார ஊழியர்கள் உட்பட 62 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
கேரளாவில் 7 சுகாதார ஊழியர்கள் உட்பட 62 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கை:  கேரளாவில் இன்று (நேற்று) 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 13 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் ெதாடர்பில் இருந்ததால் நோய் பரவியுள்ளது. இதில் 7 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆவர். 3 பேர் குணமடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை 794 பேருக்கு ேநாய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 515 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 275 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கேரளாவுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 88640 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 91084 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை