நீங்களே தனியா இருந்துக்குங்க இல்ல ஜெயில்ல போட்டுருவேன்: மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
நீங்களே தனியா இருந்துக்குங்க இல்ல ஜெயில்ல போட்டுருவேன்: மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை

இம்பால்: ‘வெளிமாநிலங்களில் இருந்து மணிப்பூர் திரும்புவோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள்,’ என முதல்வர் பிரேன் சிங் எச்சரித்துள்ளார். வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகளில் சிக்கி இருப்போர்களும் சிறப்பு விமானம், கப்பல் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர்.  இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மணிப்பூருக்கு வரும் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் பிரேன் சிங் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மணிப்பூர் திரும்பி வரும் மக்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடோடு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள், மாநிலம் திரும்புவோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்,” என்றார்.

மூலக்கதை