சிறப்பு ரயில்கள், பஸ்கள் மூலம் 75 லட்சம் தொழிலாளர் சொந்த ஊர் திரும்பினர்

தினகரன்  தினகரன்
சிறப்பு ரயில்கள், பஸ்கள் மூலம் 75 லட்சம் தொழிலாளர் சொந்த ஊர் திரும்பினர்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புன்யா சலிலா வஸ்தவா கூறியதாவது: கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நாட்டில் 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 75 லட்சம் பேர் ஊர் திரும்பி உள்ளனர். ரயில்வே துறை கடந்த 1ம் தேதி முதல் இயக்கிய 2,600 சிறப்பு ரயில்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 35 லட்சம் பேர் ஊர் திரும்பி உள்ளனர். 40 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.  கடந்த ஏப்ரல் 3ம் தேதி கணக்கின்படி, ரூ.11,092 கோடி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை