ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ.36,352க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ.36,352க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்ட பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,528 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 36,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.51.40 ஆக இருந்தது. ஆனால் இன்று அதன் விலை ரூ.52.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை