பெரிய நடிகர்கள் மவுனம்!

தினமலர்  தினமலர்
பெரிய நடிகர்கள் மவுனம்!

கொரோனாவால் முடங்கியுள்ள திரைத்துறையை மீட்கும் வகையில், நடிகர் - நடிகையர் பலர், தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து வருகின்றனர். இதுவரை, விஜய் ஆன்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி, நாசர், மஹத், உதயா உள்ளிட்ட பலர், சம்பளத்தை குறைக்க, நடிகை டாப்சியும் தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்க, சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.ஆனால், இது குறித்து பெரிய நடிகர்களோ, நடிகையரோ, இதுவரை வாய் திறக்கவில்லை. 'பெப்சி' உள்ளிட்ட திரைத்துறை சங்கத்தின் உறுப்பினர்களின் சுமையை போக்க, உச்ச நடிகர்கள் பலரும், தலா, ஒரு படத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தால், நலமாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

மூலக்கதை