விஜய் உடன் மோதுவாரா?

தினமலர்  தினமலர்
விஜய் உடன் மோதுவாரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும், டாக்டர் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை, தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட, ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். தற்போது, கொரோனாவால், விஜயின், மாஸ்டர் படம், தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.இதனால், விஜயுடன், சிவகார்த்திகேயன் மோதுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து, படத்தின் இயக்குனர் கூறுகையில், ''இன்னும் கொஞ்சம் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். தற்போது, 'எடிட்டிங்' பணி நடந்து வருகிறது. ரிலீஸ் தேதியை இன்னும் உறுதி செய்யவில்லை,'' என்றார். முன்னதாக, சிவகார்த்திகேயன் நடித்த, ஹீரோ படம், கடந்தாண்டுடிசம்பரில் வெளியாகி தோல்வியை தழுவியதால், சென்டிமென்ட் படி,தீபாவளிக்கு, டாக்டர் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை