இடம் பொருள் ஏவல் படத்திற்கு விடிவு

தினமலர்  தினமலர்

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, இடம் பொருள் ஏவல் படம், ஆறு ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இப்படம், நிதி நெருக்கடியால் வெளியாக முடியாமல் தவிக்கிறது. படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இப்படம், தற்போது ஆன்லைனில் வெளியாக உள்ளதாக, தகவல் வெளியான நிலையில், படக்குழு அதை மறுத்துள்ளது. கொரோனா முடிந்ததும், தியேட்டரில் தான் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், சீனுராமசாமி கூறுகையில், உருவப்படும் சேலையை பற்றாமல், தன் இரண்டு கைகளையும் உயர்த்தி, கிருஷ்ணா... கிருஷ்ணா என பதறிய, திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எனக்கு, ஆறுதல் இந்த திரைப்படம் தான். ஆனால், எனக்கு பிள்ளை, லிங்குசாமிக்கு நன்றி. இடம் பொருள் ஏவல் வெளியீடு, எனக் கூறியுள்ளார்.

மூலக்கதை