தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் 'ஸ்கிரிப்ட் ரைட்டிங்'?

தினமலர்  தினமலர்
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டிங்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்துள்ள 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் வெளியானதிலிருந்து சிலபல பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், யு-டியுப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளதோடு, 43 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.

குறும்படத்தில் கார்த்திக் (சிம்பு) 'உன் காலடி தடத்தில்' என்ற படத்தின் ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில் டைப்பிங் செய்து கொண்டிருப்பார். தமிழ்ப் படத்தின் ஸ்கிரிப்ட்டை எப்படி ஆங்கிலத்தில் 'டைப்' செய்து அதை தமிழ்ப் படத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற ஆச்சரியம் அதைக் கவனித்த சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தமிழ்ப் படங்களுக்கு 'கதை, திரைக்கதை, வசனம்' தமிழில் எழுதினால்தானே சிறப்பாக இருக்கும், எப்படி இப்படி ஆங்கிலத்தில் எழுதி தமிழ்ப் படத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் நமக்கும் வந்தது.

இது குறித்து இன்றைய தலைமுறை இயக்குனரான 'K 13' படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டனிடம் கேட்டோம். “என்ன இப்படி கேக்கறீங்க, நான், இன்னும் சிலர் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதுவோம். அதில் ஒரு சில பேர் தேவைப்பட்டால், தமிழில் மொழிமாற்றம் செய்து கொள்வார்கள். சிலர் அதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால், நான் முதலில் ஆங்கிலத்தில் டைப் செய்து, பின்னர் அதை முற்றிலுமாக தமிழில் மொழிமாற்றம் செய்து கொள்வேன்,” என்கிறார்.

தலைமுறை மாற மாற சினிமா மட்டும் மாறவில்லை, சினிமாவிற்கான எழுத்தும் மாறி வருகிறது.

மூலக்கதை