அமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் : ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் : ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாகாண அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் வழிபாட்டுதலங்களை திறந்து விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பேசியது சர்ச்சையாகி உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவில்  60 நாட்களாக கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன. இதில் ஒரு அம்சமாக கிறிஸ்துவ பேராலயம், மசூதிகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான முடிவுகளை மாகாண அரசுகள் எடுக்க வேண்டிய நிலையில், வழிபாட்டு தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க மாநில ஆளுநர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களை இன்றியமையாத சேவைகளை வழங்கும் அத்தியாவசிய இடங்களாக நான் அடையாளம் காண்கிறேன்ஆளுநர்கள் சரியானதைச் செய்ய வேண்டும், இந்த மிக முக்கியமான அத்தியாவசிய நம்பிக்கை இடங்களை இப்போதே திறக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் ஆளுநர்களை மீறி உத்தரவிடுவேன். அமெரிக்காவில், நமக்கு அதிக பிரார்த்தனை தேவை என கூறினார்அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட சில மாகாணங்களில் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன,கட்டுப்பாடு தளர்வுகளை மாகாண அரசுகள் எடுத்து வரும் நிலையில், டிரம்ப் தன்னிச்சையாக பேசியிருப்பது அதிபர் தேர்தலில் ஆதாயம் பெறவே என்று புகார் எழுந்துள்ளது.அமெரிக்காவில் மாகாண அரசுகளுக்கு உள்ள உரிமையை அதிபர் டிரம்ப் கையில் எடுக்க முடியாது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை