மோகன்லாலின் டைரக்சன் அறிவிப்பு என்னாச்சு..?

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் டைரக்சன் அறிவிப்பு என்னாச்சு..?

பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் மனதில் எங்கோ ஒரு ஓரமாக டைரக்சன் ஆசை துளிர் விட்டுக் கொண்டே தான் இருக்கும்.. 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்திவிராஜ், கடந்த வருடம் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதனை தொடர்ந்து நடிகர் மோகன்லாலும்.. 'பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz Guardian Of D Gamas Treasure) என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக கடந்த வருடம் ஏப்-22ஆம் தேதி அறிவித்தார்.

ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் அதன்பிறகு அதை பற்றிய பேச்சே இல்லை என வருத்தத்தில் இருக்கிறார்கள் மோகன்லால் ரசிகர்கர்கள். அதற்கு காரணம் இந்தப்படத்தின் பெரும்பாலான படப்ப்பிடிப்பை வெளிநாட்டில் தான் நடத்த திட்டமிட்டிருந்தாராம் மோகன்லால்.. சொல்லப்போனால் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்குவதுதான் அவரது திட்டம்.. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக தற்போது சூழலே முற்றிலும் மாறிப்போனதால், தற்போதைக்கு படம் இயக்கும் எண்ணத்தையே தள்ளி வைத்து விட்டாராம் . ஏற்கனவே தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்த வருடம் ரிலாக்ஸாக டைரக்சனில் இறங்க இருக்கிறாராம் மோகன்லால்.

மூலக்கதை