ரகுல் பிரீத் சிங்கின் 108 சூர்யநமஸ்காரம்

தினமலர்  தினமலர்
ரகுல் பிரீத் சிங்கின் 108 சூர்யநமஸ்காரம்

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராகுல் பிரீத் சிங்.. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர்.. இவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம். அந்தவகையில் 2018ல் இருந்து யோகா பயிற்சி எடுத்துவரும் ரகுல் பிரீத் சிங், ஒரேசமயத்தில் 108 முறை சூர்யநமஸ்காரம் செய்வேன் என ஆச்சர்யப்படுத்துகிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் தான் யோகா செய்யும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளதுடன், “முன்பெல்லாம் தினசரி 108 முறை சூர்யநமஸ்காரம் செய்து வந்தேன்.. இப்போதும் கூட வாரத்தில் இரண்டு, மூன்று முறை அதை தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். இது உடம்பு மற்றும் மன பலத்தை வலுப்படுத்துவதுடன் இரண்டையும் சமமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது” என டிப்ஸும் தருகிறார்.

View this post on Instagram

This lockdown has pushed me to do 108 surya namaskars atleast 2-3 times a week and The feeling post practice is indescribable ❤️❤️ #sunsalutation helps you build inner and outer strength , create mind body balance and churns every organ of your body to release toxins

மூலக்கதை