உத்தரபிரதேச கொரோனா பாதிப்பில் 22% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்: 5.42 லட்சம் பேர் கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேச கொரோனா பாதிப்பில் 22% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்: 5.42 லட்சம் பேர் கண்காணிப்பு

லக்னோ: உத்தரபிரதேச கொரோனா பாதிப்பில் 22% பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் 5.42 லட்சம் பேர் சுகாதார பணியாளர்களால் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்தும், சரக்கு லாரியிலும், ரயிலிலும் செல்கின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்திற்கு திரும்பியுள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தில் மொத்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5,515 பேர். இறந்தவர்கள் 138 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் அமித் மோகன் பிரசாத் கூறுகையில், ‘இதுவரை திரும்பி வந்த 1,230 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது. மொத்தமாக 46,000-க்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. ெமாத்த பாதிப்புகளில் 22 சதவீதம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். உத்தரபிரதேசத்தில் இதுவரை, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர். இதுவரை 5.42 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

மூலக்கதை