‘தனிமை’ அவசியம்: ஐ.சி.சி., பரிந்துரை | மே 22, 2020

தினமலர்  தினமலர்
‘தனிமை’ அவசியம்: ஐ.சி.சி., பரிந்துரை | மே 22, 2020

துபாய்: போட்டிக்கு முன், வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று, ஐ.சி.சி., பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உட்பட ஒட்டுமொத்த விளையாட்டும் பாதிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ.,) அல்லது உயிரியல் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். இவர், அரசாங்க விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டியை மீண்டும் துவங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கும் பொறுப்பாவார்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களுக்கு உடல், வெப்பநிலை பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மூலக்கதை