போலார்டு ஒப்பந்தம் ரத்து | மே 22, 2020

தினமலர்  தினமலர்
போலார்டு ஒப்பந்தம் ரத்து | மே 22, 2020

நார்த்தாம்ப்டன்: போலார்டின் ஒப்பந்தத்தை நார்த்தாம்ப்டன்ஷயர் அணி ரத்து செய்தது.

விண்டீஸ் ‘ஆல் ரவுண்டர்’ போலார்டு 33. ‘டுவென்டி–20’ அணி கேப்டனாக உள்ளார். இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி தொடரில் நார்த்தாம்ப்டன் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 

இதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீம் அஷ்ரப்பும் இந்த அணிக்காக விளையாட இருந்தார். தற்போது கொரோனா காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்கள் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்டன. 

இதனால் போலார்டு, பகீம் அஷ்ரப் என இருவரது ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன. அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் ரிப்லே  கூறுகையில், ‘‘இருவரும் சிறந்த வீரர்கள். வேறு வழியில்லாததால் நீக்கப்பட்டனர். சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி,’’ என்றார்.

மூலக்கதை