கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க

தினகரன்  தினகரன்
கொரோனாவை பரப்பிய வுகான் மார்க்கெட் உயிரோட சாப்பிட்டாங்க இப்ப உயிர வாங்குறாங்க

* சர்ச்சைகளை மீறி திறக்கப்பட்ட சந்தை* வன விலங்குகளுக்கு மட்டும் திடீர் தடைபறக்கறதுல விமானத்தை மட்டும் விட்டுட்டாங்க, நீந்துறதுல கப்பல மட்டுந்தான் கண்டுக்கல, கால் முளைச்சதுல, டேபிள் நாற்காலியை மட்டும் மறந்துட்டாங்க... - இது சீன மக்களின் உணவுப்பழக்கத்தை பற்றி வேடிக்கையாக கூறப்படும் வாசகம்.  உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்த சீனர்களின் சாதனையை பற்றி வியந்தவர்களே கூட, சாப்பிடும் ஐயிட்டங்களை பார்த்தால் கண்டிப்பாக முகம் சுழித்து விடுவார்கள். எந்த உயிரினத்தையும் விட்டு வைப்பது கிடையாது. இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகுதான், சீனர்களின் உணவு முறை பற்றி அதிக சர்ச்சை எழுந்தன. வவ்வால்களால் தான் இந்த வைரஸ் பரவியது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வவ்வால் மட்டுமல்ல, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களை கூட ருசிப்பவர்கள் அவர்கள். குறிப்பாக, கொரோனா உருவான வுகான் பகுதியில் இதற்கெனவே பிரத்யேக சந்தைகள் உள்ளன. இங்கு, பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, நரி, சிங்கம் போன்றவை விற்கப்படுகின்றன.     வுகானில் கொரோனா வைரஸ் தொற்று வவ்வால்களால்தான் பரவியது என்ற தகவல் வெளியான பிறகு, தொற்று நோய் நிபுணர்கள் இதை ஆமோதித்தார்கள். அதோடு, சீனாவில் வன உயிரினங்களையும், அரிய விலங்குகளையும் விற்கும் ‘வெட் மார்க்கெட்’களை கண்டிப்பாக மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான வலியுறுத்தலாக இருந்தது. வெட் மார்க்கெட் என்பது, இந்த அரிய உயிரினங்களை மட்டுமே விற்பதல்ல. காய்கறி, பழங்கள் மற்றும் நம்மூரில் சாப்பிடும் மீன், கோழி இறைச்சிகளும் கூட விற்கப்படுகின்றன. இருப்பினும். அரிய வன விலங்கு இறைச்சிக்கு இந்த மார்க்கெட் படு பிரபலம். எனினும், கொரோனா பரவலுக்கு பிறகு எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்து, வுகான் வெட் மார்க்கெட்டில் அரிய வன விலங்குகளை விற்க சீனா தடை விதித்தது. ஆனால், சீனர்களுக்கு ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ? மீண்டும் ஏப்ரலில் உகான் மார்க்கெட், களைகட்ட தொடங்கியது. பாம்பு உட்பட பல உயினங்கள், தங்களை வாங்க யாராவது வருவார்களா என தலைநீட்டி பார்த்துக் கொண்டிருந்தன. எல்லாமே இங்கு உயிரோடு விற்பதில்லை. ஆனாலும், விலங்குகளின் உயிரோடு விளையாடுபவர்கள் சீனர்கள். உயிரோடு வாயில் போட்டு ‘லபக்’குவதில் அவர்களுக்கு அலாதி ஆர்வம்.இதனால் ஏப்ரல் 16ம் தேதியில் இருந்து வழக்கமாகவே வன விலங்குகள் விற்பனை தொடங்கிதால், உலக நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. மார்ச் மாதம் 22ம் தேதியே சீனாவின் 94 சதவீத ‘வெட் மார்க்கெட்’கள் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் கடந்த 13ம் தேதி, அரிய வன விலங்குகள் விற்பனைக்கு மட்டும் சீனா தடை விதித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இன்னும் 5 ஆண்டுக்கு மற்றொரு ெகாள்ளை நோய் பரவாது என்ற உத்தரவாதத்தை தருமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஆண்டு வர்த்தகம் 5,54,800 கோடிவிலங்குகளை விற்கும் வுகான் மட்டுமின்றி சீனாவின் ‘பிரஷ் சந்தை’யான வெட் மார்க்கெட்டுகளில் விற்பனை எப்போதுமே களை கட்டும். பல லட்சம் கோடிகள் புரளக்கூடிய சந்தைகள் இவை. சீனா வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஆண்டு வர்த்தகம் 7,300 கோடி டாலர். அதாவது ஆண்டுக்கு ₹5,54,800 கோடிக்கு வியாபாரம் நடக்கிறது. சீனாவில் இருப்பது போன்றே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் வெட் மார்க்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அலாதி ருசிவெட் மார்க்கெட்டில் சீனர்கள் ‘ருசிக்கும்’ உயிரினங்கள் சில: பாம்பு, வவ்வால், எறும்புதின்னி, மயில், ஓநாய் குட்டி, முதலை, குள்ளநரி, சிங்கம், முள்ளம்பன்றி, மான் இது தவிர, கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பல்லி, பூரான், தேள், நத்தை, நாய், பூனை என எண்ணிலடங்கா ஊர்வன, பறப்பன, நடப்பன என எதையுமே சீனர்கள் விட்டு வைப்பதில்லை. இவற்றில் பலவற்றை உயிரோடு ருசிப்பதில் சீனர்களுக்கு நிகர் சீனர்கள்தான்.நாளை எதுவோ?ஏற்கெனவே சார்ஸ் கொள்ளை நோய் 2003ம் ஆண்டு பரவியபோது, இந்த பரவல் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புனுகு பூனை விற்பனையோடு தொடர்பு படுத்தப்பட்டது. தற்போது, உகான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட வவ்வால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியாகின. இப்படி உயிரோடு விளையாடும் சீனா, அடுத்ததாக, எந்த உயிரினம் மூலம் எதை பரப்பப்போகிறதோ என்ற பதைபதைப்பு உலகம் முழுக்கவே பரவிக்கிடக்கிறது.‘புசிக்க’ வழி வகுத்த பாதுகாப்பு சட்டம்எத்தனையோ நாடுகளில் வெட் மார்க்கெட்கள் இருந்தாலும், சீனாவில் ரொம்ப ஸ்பெஷல்தான். சீனா கடந்த 1989ம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. இது, நீங்கள் நினைப்பது போல் வன விலங்குகளை பாதுகாப்பதற்கு அல்ல. வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கவே இதில் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 2016ல் இந்த சட்டம் திருத்தப்பட்டபோதும், வன விலங்கு வர்த்தகத்தை பாதுகாக்கும் அம்சங்கள் நீக்கப்படவில்லை.

மூலக்கதை