புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் மோடி: மே.வங்கத்துக்கு 1000 கோடி நிவாரணத் தொகை: பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி

தினகரன்  தினகரன்
புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் மோடி: மே.வங்கத்துக்கு 1000 கோடி நிவாரணத் தொகை: பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதி

புதுடெல்லி: மேற்கு வங்கம், ஒடிசாவில் அம்பன் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நேற்று பார்வையிட்டார். பெரும் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்திற்கு உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடியும், பலியானோர் குடும்பத்திற்கு  மத்திய அரசு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குவதாக அவர் அறிவித்தார்.வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தின் இடையே கடந்த 20ம் தேதி கரையை கடந்தது. கொல்கத்தா உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நேற்று காலை பிரதமர் மோடி விமானம் மூலம் கொல்கத்தா சென்றார். அவரை மேற்கு வங்க ஆளுநர் ெஜக்தீப் தன்கரும், முதல்வர் மம்தாவும் வரவேற்றனர். பின்னர்,மூவரும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். பிறகு, வடக்கு 24 பர்கனாசின் பசிரத் பகுதியில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, ‘‘புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரண நிதியும் மத்திய அரசு வழங்கும். மேலும், மேற்கு வங்கத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடி இடைக்கால நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்கப்படும். சோதனை நேரத்திலும் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது,’’ என பாராட்டினார்.  அதைத் தொடர்ந்து, விமானம் மூலம் ஒடிசா சென்ற பிரதமர் மோடி, முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.  பின்னர் ஒடிசாவுக்கு ரூ.500 கோடி நிவாரண தொகை அறிவித்தார். மலர் கொத்தில்லை வணக்கம் மட்டுமேபிரதமர் மோடியை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்ற மம்தாவும், புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்ற நவீன் பட்நாயக்கும் சமூக இடைவெளியை பின்பற்றினர். முகக்கவசம் அணிந்து வந்த அவர்கள், பிரதமரை வரவேற்க கைகுலுக்கவோ, மலர் கொத்து வழங்கவோ இல்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தனர். பிரதமரும் முகக் கவசம் அணிந்திருந்தார். .கூட்டாக பேட்டி அளித்த போதும் 6 அடி சமூக இடைவெளி விட்டு நின்றனர்.* மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மேலும் 5 சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம், புயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. * லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.* கொல்கத்தா, பர்கனாஸ், கிழக்கு மிட்னபூர், ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம், செல்போன் சேவை கடுமையாக பாதித்துள்ளது.* மீட்பு பணிகளும், சாலைகள் சீரமைப்பு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கின்றன.* வடக்கு, தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 700 கிராமங்கள் வெள்ளத்தால்  மூழ்கியுள்ளன. * தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. * அம்பன் புயலால் ஒடிசாவில் பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. 1 லட்சம் கோடி இழப்புபுயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா அளித்த பேட்டியில், ‘‘அம்பன் புயலால் ஏற்பட்ட சேதம், தேசிய பேரிடரை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பு. இதுபோன்ற ஒரு அழிவை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. வழக்கமான நிலை திரும்ப கொஞ்ச காலமாகும். இப்போது ஊரடங்கு, கொரோனா பாதிப்பு,  புயல் பாதிப்பு என மூன்று சவால்களை ஒரு சேர சந்தித்து வருகிறோம். அம்பன் புயலால் சுமார் 8 மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எவ்வளவு நிவாரண நிதி தர வேண்டுமென முடிவெடுப்பது அவர்கள் விருப்பம். நாங்கள் சேத மதிப்பு விவரங்களை கொடுத்து விடுவோம்,’’ என்றார்.ராகுல் இரங்கல்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘அம்பன் புயலால் மேற்கு வங்கம், ஒடிசா இரு மாநிலங்களும் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன.  இப்புயலால் தங்கள் சொந்தங்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது முழு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.அய்லாவை விட மோசம்மேற்கு வங்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு, இதே மாதத்தில் அய்லா புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதை விட அம்பன் புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. மேலும், புயல் பாதிப்பிலிருந்து மீள இந்தியா, வங்கதேச மக்களுக்கு தேவையான உதவிகளை ஐநா.வின் மனித நேய அமைப்புகள் வழங்கி வருவதாகவும், புயலால் இருநாட்டிலும் 1.9 கோடி குழந்தைகளின் உடல் நலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 83 நாட்களுக்கு பின்...பிரதமர் மோடி சுமார் 3 மாதத்திற்குப் பிறகு டெல்லியிலிருந்து வெளி மாநிலத்திற்கு சென்றுள்ளார். கடைசியாக அவர் கடந்த பிப்ரவரி 29ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ், சித்ரகூட் பகுதிகளுக்கு சென்றார். அதன்பின், கொரோனா பரவலால் அவர் எங்கும் செல்லவில்லை. தற்போது, 83 நாட்களுக்குப் பிறகு நேற்று மேற்கு வங்கம், ஒடிசா சென்று திரும்பி உள்ளார்.

மூலக்கதை