ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று கேரளாவில் மீண்டும் வலம் வரும் வைரஸ்

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று கேரளாவில் மீண்டும் வலம் வரும் வைரஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் இன்று (நேற்று) 42 பெருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகமாகும். நேற்று (நேற்று முன்தினம்) கொரோனாவுக்கு திருச்சூரை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்துள்ளார்.  இன்று (நேற்று) நோய் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் வருமாறு: கண்ணூர் - 12, காசர்கோடு- 7, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்கள் தலா 5, திருச்சூர், மலப்புரம்-4, கோட்டயம் -2, கொல்லம், பத்தனம்திட்டா, வயநாடு தலா 1. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் மகராஷ்டிரா, தலா ஒருவர்தமிழகம், ஆந்திராவைசேர்ந்தவர்கள்.17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை கேரளாவில் 732 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வௌிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள்மூலம் தான் தற்போது நோய் பரவுகிறது

மூலக்கதை