கிருமி நாசினி தெளிப்பு பணியில், 'ரோபோ'

தினமலர்  தினமலர்
கிருமி நாசினி தெளிப்பு பணியில், ரோபோ

தி.நகர் : தி.நகரில், 'ரோபோ' மூலம், குறுகிய தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து, 'நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம், சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என, பல்வேறு திட்டங்கள் மூலம், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இதில், 'எம் ஆட்டோ' குழுமம் தயாரித்த, கிருமி நாசினி தெளிக்கும் நவீன ரோபோ உதவியுடன், சென்னையின் குறுகலான தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்த ரோபோவில், 10 லிட்டர் கிருமி நாசினி வைக்க முடியும். இது, 'மொபைல் ஆப்' வாயிலாக இயங்கக் கூடியது. இந்த நவீன ரோபோவால், கோடம்பாக்கம் மண்டலம், தி.நகர், சி.ஐ.டி., நகர் பகுதியில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மூலக்கதை