ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது

தினமலர்  தினமலர்

புது­டில்லி:அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, தனி­யார் பங்கு முத­லீட்டு நிறு­வ­ன­மான, கே.கே.ஆர்., 11 ஆயி­ரத்து, 367 கோடி ரூபாயை, ஜியோ பிளாட்­பார்­மில் முத­லீடு செய்ய உள்­ளது.
ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், அதன் கடனை அடைக்­கும் முயற்­சி­யில், ஜியோ பிளாட்­பார்ம் நிறு­வ­னத்­தின் பங்­கு­களை, பெரிய அள­வில் விற்­பனை
செய்து, நிதி திரட்டி வரு­கிறது.

அதன் தொடர்ச்­சி­யாக, ஜியோ­வின் பங்­கு­களை தற்­போது, கே.கே.ஆர்., வாங்க உள்­ளது.
இது குறித்த முக்­கி­ய­மான அம்­சங்­கள்:
கே.கே.ஆர்., ஜியோ பிளாட்­பார்ம் நிறு­வ­னத்­தில், 11 ஆயி­ரத்து, 367 கோடி ரூபாயை முத­லீடு செய்ய உள்­ளது

இந்த முத­லீட்­டின் மூலம், கே.கே.ஆர்., நிறு­வ­னத்­துக்கு, ரிலை­யன்ஸ் ஜியோ­வின், 2.32 சத­வீத பங்­கு­கள் கிடைக்­கும்
கே.கே.ஆர்., நிறு­வ­னம், ஆசி­யா­வில் மேற்­கொள்­ளும் மிகப் பெரிய முத­லீடு, இது­வே­யா­கும்

ஜியோ பிளாட்­பார்­மில், பெரிய அள­வில் முத­லீடு செய்­யும், ஐந்­தா­வது நிறு­வ­ன­மா­கும், கே.கே.ஆர்.,
இதற்கு முன், பேஸ்­புக், சில்­வர் லேக் பார்ட்­னர்ஸ், விஸ்டா ஈக்­விட்டி பார்ட்­னர்ஸ், ஜென­ரல் அட்­லான்­டிக் ஆகிய நிறு­வ­னங்­கள், ஜியோ­வில் முத­லீ­டு­களை மேற்­கொண்­டுள்ளன

இந்த ஐந்து நிறு­வ­னங்­கள் மூல­மாக, ஜியோ ஈட்­டும் மொத்த தொகை, 78 ஆயி­ரத்து, 562 கோடி ரூபாய் ஆகும்

கொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி, வெற்­றி­க­ர­மாக அதி­க­ள­வில் நிதி திரட்­டும் நிறு­வ­ன­மாக, ரிலை­யன்ஸ் மாறி உள்­ளது

கே.கே.ஆர்., நிறு­வ­னம், 1976ம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­ட­தா­கும். இந்­நி­று­வ­னம், பெரும்­பா­லும் தொழில்­நுட்­பம் சார்ந்த நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரு­கிறது
இந்­நி­று­வ­னம் துவங்­கி­ய­தி­லி­ருந்து இது­வரை, கிட்­டத்­தட்ட, 2.27 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு, தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்­டுள்­ளது

இந்த ஒப்­பந்­தத்தை பொறுத்­த­வரை, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் நிதி ஆலோ­ச­க­ராக, ’மார்­கன் ஸ்டான்லி’யும், சட்ட ஆலோ­ச­க­ராக, ’ஏ.இசட்.பி., அண்டு பார்ட்­னர்ஸ்’ மற்­றும் ’டேவிஸ் போல்க் அண்டு வார்­டு­வெல்’ ஆகிய நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்றன

கே.கே.ஆர்., நிறு­வ­னத்­துக்கு நிதி ஆலோ­ச­க­ராக, ’டெலாய்ட் டச் தோமட்சு இந்­தியா எல்.எல்.பி.,’ நிறு­வ­ன­மும், சட்ட ஆலோ­ச­க­ராக, ‘ஷர்­துல் அமர்­சந்த் மங்­கல்­தாஸ் அண்டு கோ’ மற்­றும் ‘சிம்ப்­சன் தாச்­சர் அண்டு பார்ட்­லெட் எல்.எல்.பி.,’ ஆகிய நிறு­வ­னங்­களும் செயல்­ப­டு­கின்றன.

கே.கே.ஆர்., முத­லீடு, பரி­வர்த்­தனைஒழுங்­கு­முறை மற்­றும் பிற வழக்­க­மான ஒப்­பு­தல்­
க­ளுக்­குப் பிறகே முழு­மைய­டை­யும்.

மூலக்கதை