தன்னைக் காப்பாற்றுமாறு துபாயிலிருந்து கதறிய தேனி இளைஞர்; உதவிய நல் உள்ளங்கள்

தினகரன்  தினகரன்
தன்னைக் காப்பாற்றுமாறு துபாயிலிருந்து கதறிய தேனி இளைஞர்; உதவிய நல் உள்ளங்கள்

துபாய்: தன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தன்னைக் காப்பாற்றுமாறு துபாயிலிருந்து தேனி பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்ற இளைஞர் காணொளி வெளியிட்டிருந்தார். மேல் சட்டை இல்லாமல் எலும்பும் தோலுமாக அவர் அனுப்பிய வீடியோ உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து செய்தி அறிந்த துபாய் தமிழர்களை நிர்வாகிகளாக கொண்ட ஈமான் அமைப்பின் சார்பில் பொதுச்செயலாளர் ஹமீது யாஸின்  தலைமையில் இணை செயலாளர் நஜீம் மரிக்கா மற்றும் பத்திரிக்கையாளர் நிருபமா ஆகியோர் சந்தித்து அவருக்கு தேவையான ஏற்பாடுகள் செய்தனர்.மேலும் ரைஸ் குழுமத்தின் சார்பில் ஆல்பர்ட் பிராக்மெண்ட்ஸ் ஏற்பாட்டில் மருத்துவர் ராஜ்குமார் அவருக்கு சிகிச்சை தொடங்கியதோடு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் எவ்வித கட்டணமும் இன்றி செய்து வருகிறார். மேலும் பல்வேறு நல்ல உள்ளங்களும் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு சிகிச்சை செய்யப்பட்டு ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளை ஈமான் குழு சார்பில் நஜீம் மரிக்கா செய்து வருகிறார். செய்தியறிந்த தேனி எம்.பி ரவீந்திரநாத் இன்று துபாயில் இருந்து கொச்சின் வருகை தரும் விமானம் மூலம் அவரை ஊருக்கு அழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மூலக்கதை