டிரம்ப்க்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் பெரும் விளைவுகளை சந்திப்பார்கள்: ஜோ பிடன் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
டிரம்ப்க்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் பெரும் விளைவுகளை சந்திப்பார்கள்: ஜோ பிடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.இந்நிலையில், ஒபாமா அதிபராகவும், ஜோ பிடன் துணை அதிபராகவும் பதவி வகித்த காலத்தில் அதிக முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். இதற்கிடையே கொலம்பிய பல்கலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்று ஜோ பிடேன் பேசினார். டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இவர்களுக்கு பதில் அளித்து என் மரியாதையை குறைக்க விரும்பவில்லை என கூறினார். அவர்கள் சாக்கடையில் விழுந்து விட்டனர் என்பதற்காக நானும் சாக்கடையில் விழ விரும்பவில்லை. சமீபகாலமாக டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இது  ஜனநாயக நாடு என்பதை மறந்து தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றனர். டிரம்பை விமர்சிப்பவர்கள் மீது அதிகாரத்தை கொண்டு தாக்குகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்தார்.

மூலக்கதை