பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து; பயணம் செய்த 98 பேரின் நிலை என்ன?.. மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரம்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து; பயணம் செய்த 98 பேரின் நிலை என்ன?.. மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் விபத்துக்குள்ளான இடம் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விரைவு அதிரடி படையும் சிந்துமாகாண போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். எனினும் அந்த விமானத்தில் பயணம் சிஎதவர்களின் நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மூலக்கதை