பிளாஷ்பேக்: இரு துருவங்களை இணைத்த டி.ஆர்.ராமண்ணா

தினமலர்  தினமலர்
பிளாஷ்பேக்: இரு துருவங்களை இணைத்த டி.ஆர்.ராமண்ணா

தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர். டி.ஆர்.ராமண்ணா. ராஜகுமாரி வளர்ந்து பெரிய நடிகை ஆன பிறகு தனது சகோதரரை இயக்குனர் ஆக்கினார். அவரது 23வது நினைவு நாள் இன்று.

டி.ஆர்.ராமண்ணா பல படங்களை இயக்கினாலும் அவரது அடையாளமாக கருதப்படும் படம் கூண்டுக்கிளி. இதற்கு காரணம் இந்த ஒரே படத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இருவரையும் இணைத்த பெருமை டி.ஆர்.ராமண்ணாவை சாரும்.

படத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முதலில் நண்பர்களாக இருப்பார்கள் பின்னர் இருவரும் எதிரும், புதிருமாக மாறுவார்கள். படம் வெளியானபோது தியேட்டர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்டதும், திரைகள் கிழிக்கப்பட்டதும், படப்பெட்டி எரிக்கப்பட்டதும் வரலாறு.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூண்டுக்கிளி பெரிய தோல்வியை அடைந்தது என்றாலும் இருதுருவங்கள் இணைந்து நடித்த ஒரே படம் என்பதால் கூண்டுக்கிளி முக்கியமான படமானது. இருவரையும் இணைத்தவர் என்பதால் டி.ஆர்.ராமண்ணாவும் முக்கிய இயக்குனரானார்.

மூலக்கதை