மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி

தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழில் புகழ்பெற்ற மலையாள டி.வி. நடிகை மேக்னா. கயல் படத்தில் முக்கிய கேரட்டரில் நடித்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழியின் அண்ணன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் விவாகரத்து கிடைத்தது.

விவாகரத்து கிடைத்த மறுவாரமே டான் டோனி தனது காதலி டிவைன் கிளாராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் நடந்தது யாருக்கும் தெரியாது தற்போதுதான் டான் டோனி திருமண புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கணவரின் இந்த திடீர் திருமணத்தை எதிர்பார்க்காத மேக்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேக்னா தன்னுடன் தமிழ் சீரியலில் நடித்த நடிகர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூலக்கதை