இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ஜாக்குலின்

தினமலர்  தினமலர்
இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ஜாக்குலின்

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவர் கொரோன ஊரடங்கு காலத்தில் ஹோம் டான்ஸ் என்ற பெயரில் ஒரு இணையதள நிறுவனத்துடன் இணைந்து நடனப்போட்டி ஒன்றை நடத்துகிறார்.

இந்த போட்டியில் வாரத்திற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்படும் அந்த தலைப்புக்கேற்ற நடனத்தை வீட்டிலேயே நடனம் ஆடி அதனை செல்போனில் படம் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த நடனத்திற்கு ஒவ்வொரு வாரமும் 4 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தனித்துவமான நடனப் போட்டியான ஹோம் டான்சர் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நடன கலைஞர்களின் திறமையை லட்சக் கணக்கான மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி இது என்கிறார் ஜாக்குலின்.

மூலக்கதை