கொரோனாவால் நிறுத்தப்பட்ட கிரகப்பிரவேசம்

தினமலர்  தினமலர்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட கிரகப்பிரவேசம்

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் யாமி கவுதம். அந்தப் படம் 3 வருடங்கள் தாமதாக வெளிவந்ததால் காத்திருக்க முடியாமல் பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார்.

யாமி கவுதம் தனது சொந்த ஊரான சண்டிகரில் புதிதாக பங்களா கட்டி உள்ளார். மே முதல் வாரத்தில் அதன் கிரகப்பிரவேசத்தை பிரமாண்டமாக நடித்த முடிவு செய்திருந்தார். இப்போது கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் இதை ரத்து செய்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா ஊடரங்கால் நான் நினைத்தபடி எனது வீட்டு கிரகப்பிரவேசத்தை நடத்த முடியவில்லை. என்றாலும் கொரோனா பிரச்னைக்கு பிறகு புதிய வீட்டில் குடியேற இருக்கிறேன். பயணம் செய்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் எப்போது சொல்கிறார்களோ அப்பொழுது நான் சண்டிகர் செல்வேன். அதன் பிறகு நாங்கள் புது வீட்டில் குடியேறுவோம். நான் ஓவியர் இல்லை. எனது புதிய வீட்டில் வைப்பதற்காக ஓவியம் வரைந்து வருகிறேன். என்கிறார் யாமி கவுதம்.

மூலக்கதை