2 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்

தினமலர்  தினமலர்
2 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் ஆடுஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் சென்றார். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படக்குழுவினர் அங்கேயே சிக்கி கொண்டனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கு தங்கியிருந்த பிருத்விராஜும், அவரது படக்குழுவை சேர்ந்த 58 பேரும் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை கொச்சி விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் பிருத்விராஜ் தனது காரை எடுத்துக்கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு சென்று விட்டார்.

கேரள அரசு ஏற்பாட்டின்படி ஒரு வாரம் ஏதேனும் ஓட்டல் அல்லது அப்பார்ட்மெண்ட்களில் அவர்கள் தங்க வைக்கப்படுவர். பின்னர் அவர்களது வீடுகளில் அடுத்த ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன் பிறகே அவர்களால் சகஜமாக வெளியில் நடமாட முடியும்.


Actor @PrithviOfficial, along with other film crew of upcoming Malayalam film 'Aadujeevitham', who were stranded in Jordan, lands at CIAL today morning.
Video credit: Ernakulam PRD pic.twitter.com/kyXK1NMHuN
— Neethu Joseph (@neethujoseph_15) May 22, 2020


மூலக்கதை