புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்கள் : சிங்கப்பூரில் வலம்

தினகரன்  தினகரன்
புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்கள் : சிங்கப்பூரில் வலம்

சிங்கப்பூர் : புற ஊதாக் கதிர்களால், கொரோனா வைரஸை அழிக்கும் புதிய ரோபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு புறம்  அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.மறு புறம் கொரோனா வைரஸை அழிக்க ரசாயண கவச உடை, யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட முறைகளை பல நாடுகள் கையாண்டு வருகிறது.  அந்த வரிசையில், கிருமி நாசினிகளுக்கு மாற்றாக புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்களை சிங்கப்பூர் களம் இறங்கியுள்ளது. இந்த ரோபோக்கள்  புற ஊதாக் கதிர்களை வெளியிட்டு, பொருட்கள் மீது மட்டுமின்றி, காற்றில் கலந்துள்ள கொரோனா கிருமிகளையும் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. புற ஊதாக் கதிர் வீச்சால், கண்கள் மற்றும் தோலில் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த ரோபோக்கள் இயக்கப் படுகின்றன. மேலும், மனித நடமாட்டம் தென்பட்டால், கதிர் வீச்சு வெளியிடுவதை நிறுத்தும் வண்ணம் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.   

மூலக்கதை