வீடு தேடி வரும் மது சேவையை துவக்கிய, ‘ஸ்விகி’

தினமலர்  தினமலர்

புது­டில்லி : உணவு வினி­யோக நிறு­வ­ன­மான, ‘ஸ்விகி’ முதன்­மு­த­லாக, மது வகை­க­ளை­யும் வீடு­க­ளுக்கும் வினி­யோ­கம் செய்­ய துவக்கியுள்­ளது.

முதல்­கட்­ட­மாக, ஜார்க்­கண்­டில் உள்ள, ராஞ்சி நக­ரில் இந்த சேவை துவக்­கப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, பிற மாநில அர­சு­க­ளு­ட­னும், மதுவை வீடு­க­ளுக்கு வழங்­கு­வது குறித்து, இந்­நி­று­வ­னம் பேசி வரு­கிறது. இந்த சேவை, முதற்­கட்­ட­மாக, ஜார்­க்கண்ட் தலை­ந­க­ரான ராஞ்­சி­யில் துவக்கி இருப்­ப­தா­க­வும், விரை­வில், மாநி­லத்­தில் உள்ள பிற முக்­கிய நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றும், ஸ்விகி தெரி­வித்­துள்­ளது.சட்­டத்­திற்கு இணங்க, மதுவை வீடு­க­ளுக்கு வினி­யோ­கம் செய்­வ­தில், பாது­காப்பு அம்­சங்­களை கடைப்­பி­டித்து வரு­வ­தா­க­வும், ஸ்விகி தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் துணை தலை­வர் அனுஜ் ரதி கூறி­ய­தா­வது:கடை­களில் அதிக கூட்­டம் சேரா­ம­லும், சமூக இடை­வெ­ளியை பரா­ம­ரிக்­க­வும், ‘ஆன்­லைன்’ மூல­மாக ஆர்­டர் செய்து, வீட்­டில் மதுவை பெறு­வது உத­வி­க­ர­மாக இருக்­கும்.அர­சின் உரிய அனு­மதி மற்­றும் பிற சான்­றி­தழ்­க­ளை­யும் சரி­பார்த்து உறுதி செய்த பிறகே சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­களை இணைத்­துக்­கொள்­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.இதற்­கி­டையே, ‘அமே­சான்’ நிறு­வ­னம், அதன் ஆன்­லைன் உணவு டெலி­வரி சேவையை, ‘அமே­சான் புட்’ எனும் பெய­ரில், முதன்­மு­த­லாக, பெங்­க­ளூ­ரு­வில் துவக்கி உள்­ளது.

மூலக்கதை