ஒரு லட்சம் டாக்டர்களுடன் டெலிமெடிசினில் ரிலையன்ஸ்

தினமலர்  தினமலர்
ஒரு லட்சம் டாக்டர்களுடன் டெலிமெடிசினில் ரிலையன்ஸ்

புது­டில்லி : ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்தை சேர்ந்த, ’நவ்­பு­ளோட்ஸ்’ நிறு­வ­னம், தொலை­தொ­டர்பு வச­தி­கள் மூலம் மருத்­துவ சேவை­களை பெற உத­வும் வணி­கத்­தில் இறங்கி
உள்­ளது.


‘நவ்­பு­ளோட்ஸ் டெக்­னா­ல­ஜிஸ்’ நிறு­வ­னத்தை, கடந்த ஆண்­டில், முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் கைய­கப்­ப­டுத்­தி­யது. இந்­நி­லை­யில், இப்­போது நவ்­பு­ளோட்ஸ், டெலி­மெ­டி­சின் சேவை­யில் இறங்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.மேலும், அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்­களில், இந்­நி­று­வன சேவை­யில், ஒரு லட்­சம் மருத்­து­வர்­கள் இணை­வர் என­வும் தெரி­வித்­துள்­ளது.கொரோனா வைரஸ் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், மருத்­து­வர்­களை நேர­டி­யாக அணு­கு­வது என்­பது தற்­போது சிர­ம­மா­ன­தாக மாறி இருக்­கிறது. இப்­பி­ரச்­னையை தீர்க்­கும் வகை­யில், டெலி­மெ­டி­சின் சேவையை வழங்க முன்­வந்­துள்­ளது, நவ்­பு­ளோட்ஸ் நிறு­வ­னம்.இதன் தொடர்ச்­சி­யாக, மின்­னணு மருந்­த­கம், மருத்­துவ பரி­சோ­தனை மற்­றும் உடல் ஆரோக்­கி­யம் ஆகிய சேவை­க­ளை­யும் படிப்­ப­டி­யாக வழங்க திட்­ட­மிட்டு வரு­கிறது.


இது குறித்து, நவ்­பு­ளோட்ஸ் நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி பிரிவு தலை­வர் நிகில் சால்­கர் கூறி­ய­தா­வது:தற்­ச­ம­யம், 6 ஆயி­ரம் மருத்­து­வர்­கள் எங்­க­ளு­டன் உள்­ள­னர். மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­வோர் ஆன்­லைன் வீடியோ மூல­மாக, மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெற்­றுக் ­கொள்­ள­லாம்.இதற்­காக தனி­யாக செயலி எதை­யும் தர­வி­றக்­கம் செய்ய வேண்­டி­ய­தில்லை. மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து வாட்ஸ் ஆப் உள்­ளிட்ட குறுஞ்­செய்­தி­க­ளுக்கு இணைப்பு வழங்­கப்­படும். அதை இணை­ய­த­ளம் மூலம் அணு­கிக் ­கொள்­ள­லாம். தேவை­யான மருத்­து­வர்­களை ஆன்­லைன் தேடல் மூலம் தேர்வு செய்­து ­கொள்ள முடி­யும். இவ்­வாறு அவர்கூறி­யுள்­ளார். மருத்­து­வர்­க­ளி­டம் இந்த சேவைக்­காக , ஒரு குறிப்­பிட்ட கட்­ட­ணத்தை, நவ்­பு­ளோட்ஸ் பெற்­றுக்­கொள்­ளும்.

மூலக்கதை