ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் : அமெரிக்கா மிரட்டல்

தினகரன்  தினகரன்
ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் : அமெரிக்கா மிரட்டல்

வாஷிங்டன் : ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. 2018ம் ஆண்டு ரஷியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சுமார் 37,500 கோடி ரூபாய்க்கு எஸ் -400 எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை(5 எண்ணிக்கை) இந்தியா வாங்குகிறது. 600 கி.மீ. வரையிலான வான் இலக்குகளை தாக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை அழிக்க வல்லவை. எஸ் - 400 ஏவுகணைகளை வாங்க ரஷியாவிற்கு முதல்கட்டமாக சுமார் ரூ. 6000 கோடியை இந்தியா செலுத்தி இருப்பது அமெரிக்காவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இந்திய எல்லைகளை பாதுக்காக்கவல்ல சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய போர் தளவாடங்கள் தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்தியாவின் செயல் குறித்து அமெரிக்க துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள்) கூறுகையில், \'அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டப்படி (கேட்சா) ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன\', என்றார்.

மூலக்கதை