தொழில் துவங்க ஏற்ற இடம் சென்னை

தினமலர்  தினமலர்

புது­டில்லி:பன்­னாட்டு வணிக நிறு­வ­னங்­கள் தொழிற்­சா­லை­களை அமைக்க மிக­வும் ஏற்ற இடங்­க­ளாக சென்னை, அக­ம­தா­பாத், பெங்­க­ளூரு, நொய்டா, குரு­கி­ராம் உள்­ளிட்ட, 10 இடங்­கள் இருப்­ப­தாக ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.
சொத்து ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜெ.எல்.எல்., இந்­தியா மற்­றும் இன்­வெஸ்ட் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­கள் இணைந்து, ‘இந்­தி­யா­வில் தொழில் துவங்க சிறந்த இடங்­கள்’ என, ஓர் ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.இந்த அறிக்கை, இந்­தி­யா­வில் உள்ள, 40 தொழிற்­சாலை பகு­தி­களை குறிப்­பிட்டு, அவற்­றில் பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் தொழிற்­சா­லை­களை அமைக்க சிறந்த இடங்­க­ளாக, 10 இடங்­களை தேர்வு செய்து வெளி­யிட்டு உள்­ளது. கொரோனா பாதிப்­பு­களை அடுத்து, இந்­தியா தொழில் துவங்க சிறந்த இட­மாக இருக்­கிறது என, ஆய்வு தெரி­வித்­துள்­ளது.ஆய்­வில், தொழிற்­சா­லை­கள் அமைக்க சிறந்த இடங்­க­ளாக குறிப்­பிட்­டுள்­ள­வற்­றில் சென்­னை­யும் ஒன்று. சென்னை நக­ரம் மட்­டு­மின்றி; சென்னை – திருப்­பதி – நெல்­லுார் என மூன்று நகர தொழிற்­சாலை பெரு­வ­ழித் தட­மும் தொழிற்­சா­லை­கள் அமைக்க ஏற்­ற­தாக உள்­ளது என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை