பொருளாதாரம் மேம்படும்: முதலீட்டாளர்கள் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
பொருளாதாரம் மேம்படும்: முதலீட்டாளர்கள் நம்பிக்கை

மும்பை : நாட்டில் பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் மெல்ல துவங்கியதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்ந்தன. நுகர்பொருட்கள், வாகனம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கினர்.


நேற்றைய வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 31,188.79 புள்ளிகள் வரை உயர்ந்து, பின் வர்த்தக இறுதியில், 114.29 புள்ளிகள் அதிகரித்து, 30,932.90 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.37 சதவீதம் உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 39.70 புள்ளிகள் அதிகரித்து, 91,067.25 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.44 சதவீத உயர்வாகும்.
சென்செக்ஸ் பிரிவில், ஐ.டி.சி., நிறுவன பங்குகள் விலை, 7 சதவீதம் உயர்வை கண்டன. இதையடுத்து, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, டி.சி.எஸ்., எச்.சி.எல்., ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன.

மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், என்.டி.பி.சி., பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., எல் அண்டு டி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.பொருளாதார செயல்பாடுகள் துவங்கியதை அடுத்து, நாட்டின் பொருளாதார நிலை விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டனர்.

மூலக்கதை