‘பேஸ்புக்’குடன் இணைந்த ‘சாம்சங்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
‘பேஸ்புக்’குடன் இணைந்த ‘சாம்சங்’ நிறுவனம்

புது­டில்லி : ‘டிஜிட்­டல்’ வச­தி­க­ளற்ற சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­களை, டிஜிட்­டல் வர்த்­த­கத்­துக்கு மாற்­று­வ­தற்­காக, சாம்­சங் இந்­தியா நிறு­வ­னம், ‘பேஸ்புக்’ உடன் இணைந்­துள்­ளது.

சில்­லரை விற்­பனை வர்த்­த­கர்­களை, டிஜிட்­ட­லுக்கு மாற்­றும் வகை­யில், முதல் கட்­ட­மாக, 800 வர்த்­த­கர்­க­ளுக்கு, சாம்­சங், பேஸ்­புக் நிறு­வ­னங்­கள் இணைந்து பயிற்­சி­களை ஏற்­க­னவே வழங்கி ள்ளன.வரும் வாரங்­களில், மேலும் பல­ருக்கு பயிற்சி வகுப்­பு­கள் நடத்­தப்­படும் என, சாம்­சங் தன்­னு­டைய அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, சாம்­சங் மேலும் தெரி­வித்­துஉள்­ள­தா­வது:இந்த பயிற்சி வகுப்­பின் முதல் கட்­ட­மாக, ‘ஆப்­லைன்’ சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு, பேஸ்­புக் நிறு­வ­னத்­தின் செய­லி­க­ளான, ‘பேஸ்­புக், மெஸேஞ்­சர், இன்ஸ்­டா­கி­ராம், வாட்ஸ் ஆப்’ ஆகி­ய­வற்­றில் இயங்­கு­வது குறித்து பயிற்­சி­கள் வழங்­கப்­படும். இதைஅ­டுத்து, ஆன்­லைன் வர்த்­த­கம் குறித்து பயிற்­சி­கள் வழங்­கப்­படும்.சமூக இடை­வெ­ளியை பரா­ம­ரிக்­கும் வகை­யில், வாடிக்­கை­யா­ளர்­களின் வீட்டுக்கே பொருட்­களை டெலி­வரி செய்­வது குறித்து, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றோம்.
வாடிக்­கை­யா­ளர்­கள், சமூக ஊட­கங்­கள் மூலம் பொருட்­கள் பற்றி அறிந்து, ‘ஆர்­டர்’ கொடுத்து, அரு­கில் இருக்­கும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள் மூலம் பெற்­றுக் ­கொள்ள முடி­யும். இதற்கு, பேஸ்­புக் உட­னான கூட்டு உத­வி­க­ர­மாக இருக்­கும். இதன் மூலம், வாடிக்­கை­யா­ளர்­களும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­களும் டிஜிட்­டல் தளத்­துக்கு தங்­களை மாற்­றிக் ­கொள்ள இய­லும்.இவ்­வாறு சாம்­சங் தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை