சீனா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

தினகரன்  தினகரன்
சீனா குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டி வந்து இடையூறு செய்வதாக கூறிய சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் வத்சவா கூறுகையில், “இந்திய வீரர்களின் ரோந்து பணிக்கு சீனாவினால் தான் இடையூறு தரப்பட்டது. எல்லைக் கட்டுப்பாடு கோட்ைட தாண்டி இந்திய வீரர்களின் நடவடிக்கைகள் இருந்தன என்ற குற்றச்சாட்டானது உண்மையானதாக இல்லை. எல்லை நிர்வாகத்தை பொறுத்தவரை இந்திய பொறுப்பான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகின்றது” என்றார்.அமெரிக்கா கண்டனம்:  இதற்கிடையே, இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் தொந்தரவு தரும் சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது சீனாவின், ஆக்ரமிப்பு குணத்தைதான் காட்டுகின்றது என்று கூறியுள்ளது.

மூலக்கதை