பொருட்கள் மூலமாக கொரோனா எளிதில் பரவாது: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
பொருட்கள் மூலமாக கொரோனா எளிதில் பரவாது: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

வாஷிங்டன்: நாம் தொடும் மேற்பரப்புகள் மற்றும் பொருட்களின் மூலமாக கொரோனா வைரஸ் எளிதில் பரவாது என அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர்..உலகம் முழுவதும் கொரோனா வைரசை பரப்பியதன் மூலமாக பெரும் எண்ணிக்கையில் மனித உயிர்களை சீனா படுகொலை செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றார்.கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 23,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,518 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 15,51,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 93,439 பேர் உயிரிழந்துள்ளனர்.நியூயார்க், நியூஜெர்சி, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ள நிலையில், மேற்பரப்புக்கள் மற்றும் பொருட்களின் மூலமாக கொரோனா வைரஸ் எளிதில் பரவாது என அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர்.இது தொடர்பாக நோய் கட்டுப்பாடு மையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு நபர் கொரோனா வைரசை கொண்டிருக்கும் மேற்பரப்பு அல்லது பொருளை தொட்டு பின்னர் தனது வாய், மூக்கு அல்லது கண்களை தொடுவதன் மூலமாக நோய் தொற்றால் பாதிக்கப்படலாம் என்பது வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழியாக இல்லை. அதேபோல். மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை