சாதிக்க துாண்டிய யுவராஜ் சிங்: சொல்கிறார் ரோகித் சர்மா | மே 19, 2020

தினமலர்  தினமலர்
சாதிக்க துாண்டிய யுவராஜ் சிங்: சொல்கிறார் ரோகித் சர்மா | மே 19, 2020

மும்பை: ‛‛சேவக்கின் சாதனையை நான் முறியடிக்க யுவராஜ் சிங் விரும்பினார்,’’ என, ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ல் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சச்சின் 200 ரன் விளாசினார். இது, ஒருநாள் போட்டி வரலாற்றில் பதிவான முதல் இரட்டை சதமானது. பின், 2011ல் இந்துாரில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சேவக் 219 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார். பெங்களூருவில் 2013ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 209 ரன்கள் எடுத்து, சேவக் சாதனையை முறியடிக்க தவறினார். தொடர்ந்து அசத்திய இவர், அதன்பின் இரண்டு முறை (264 ரன், எதிர்: இலங்கை, 2014 மற்றும் 208* ரன், எதிர்: இலங்கை, 2017) இரட்டை சதமடித்தார்.

முதன்முறையாக இரட்டை சதமடித்தது குறித்து ‛இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் தமிழக வீரர் அஷ்வினுடன் உரையாடிய ரோகித் கூறுகையில், ‛‛முதன்முறையாக இரட்டை சதமடித்து ‛பெவிலியன்’ திரும்பிய போது என் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சகவீரர்கள் 3 அல்லது 4 பேர், கூடுதலாக 10 அல்லது 15 ரன்கள் எடுத்திருந்தால் சேவக்கின் சாதனையை முறியடித்திருக்கலாம் என்றனர். இதில் யுவராஜ் சிங், ஷிகர் தவான் முக்கியமானவர்கள்,’’ என்றார்.

மூலக்கதை