எல்லாம் மகனுக்காக... * சச்சின் புதிய அவதாரம் | மே 19, 2020

தினமலர்  தினமலர்
எல்லாம் மகனுக்காக... * சச்சின் புதிய அவதாரம் | மே 19, 2020

மும்பை: சச்சின் தனது மகன் அர்ஜுனுக்கு ‘ஹேர் கட்’ செய்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சலுான் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் வீடுகளில் ‘கட்’ செய்து கொள்கின்றனர்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும், புஜாராவுக்கு மனைவி பூஜாவும் ‘ஹேர் கட்’ செய்தனர். இந்த வரிசையில் கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சினும் இணைந்துள்ளார்.

தனது மகன் அர்ஜுனுக்கு இவர் ‘ஹேர் கட்’ செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை சச்சின் தனது ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டார்.

அதில் சச்சின் கூறுகையில்,‘ஒரு தந்தை என்ற முறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, ‘ஜிம்’ பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமன்றி, முடி வெட்டுவது என அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த ‘ஹேர் கட்’ காரணமாக எப்போதும் அழகாக இருப்பாய் அர்ஜுன். எனக்கு உதவிய மகள் சாராவுக்கு ‘ஸ்பெஷல்’ நன்றி,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை