‘பேட்டிங்’ பயிற்சியாளருக்கு தகுதி: காம்பிர் விளக்கம் | மே 20, 2020

தினமலர்  தினமலர்
‘பேட்டிங்’ பயிற்சியாளருக்கு தகுதி: காம்பிர் விளக்கம் | மே 20, 2020

புதுடில்லி: ‘‘‘டுவென்டி–20’ அணிக்கு ‘பேட்டிங்’ பயிற்சியாளராக இருப்பதற்கு நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் தேவையில்லை,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் மற்றும் கிழக்கு டில்லி தொகுதியின் பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பிர் 38. ‘டுவென்டி–20’ அணிக்கு ‘பேட்டிங்’ பயிற்சியாளராக இருப்பதற்கு தேவையான தகுதி குறித்து இவர் கூறியது: 

சர்வதேச போட்டிகளில் விளையாடாத அல்லது போதிய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத ஒருவரால் ‘டுவென்டி–20’ அணிக்கு சிறந்த ‘பேட்டிங்’ பயிற்சியாளராக இருக்க முடியாது என்று கூறுவதில் உண்மையில்லை. ‘பேட்டிங்’ பயிற்சியாளர் என்பவர் வீரர்களை மனதளவில் தயார் படுத்த வேண்டும். அவர்களது மனவலிமையை அதிகரித்தால் மிகப் பெரிய ‘ஷாட்’ அடிக்கலாம்.

எந்த ஒரு வீரருக்கும் ‘ரிவர்ஸ் ஷாட்’ அடிக்க யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதனை எந்த பயிற்சியாளரும் கற்றுத்தர மாட்டார். ஒருவேளை அப்படி முயற்சித்தால், அந்த வீரரின் சிறப்பான செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம், தேர்வுக்குழு உறுப்பினராக உதவுமே தவிர, பயிற்சியாளராக அல்ல.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

மூலக்கதை