ரோகித், ரகானே பயிற்சிக்கு ‘ரெட்’ | மே 20, 2020

தினமலர்  தினமலர்
ரோகித், ரகானே பயிற்சிக்கு ‘ரெட்’ | மே 20, 2020

மும்பை: மும்பையில் சிவப்பு மண்டலத்தில் வசிக்கும் ரோகித் சர்மா, ரகானே பயிற்சியில் ஈடுபட முடியாது.

கொரோனா காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை மட்டும் செய்து வந்தனர்.  இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மகாராஷ்டிரா அரசு, பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் உள்ள மைதானங்களில் ரசிகர்கள் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட முறையில் வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு அனுமதி வழங்கியது.

இருப்பினும் மும்பை மற்றும் அதன் சுற்று பகுதிகளான தானே, நவி மும்பை உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டல (‘ரெட்’) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வான்கடே மைதானம், பந்த்ரா குர்லா காம்ளக்ஸ், சச்சின் ஜிம்கானா உள்ளிட்ட மைதானங்கள் இந்த பகுதிகளில் தான் உள்ளன. இதனால், மும்பையில் உள்ள இந்திய அணியின் ரோகித் சர்மா, ரகானே உள்ளிட்டோர் பயிற்சியை துவக்க முடியாது.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘மைதானங்களை திறப்பது, வசதிகளை பயன்படுத்தில் மாநில அரசின் விதிகளை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம்,’’ என்றார்.

மூலக்கதை