வியர்வை வாசனை மூலம் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி!!

தினகரன்  தினகரன்
வியர்வை வாசனை மூலம் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி!!

பிரான்ஸ் : வியர்வையில் இருந்து வரும் வாசனையை வைத்து கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் பிரான்சில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவிற்கு திரான தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகளை கண்டறிவதற்காக பல்வேறு நாடுகளும் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரசை துல்லியமாக கண்டறிவவே மிகவும் சவாலாக உள்ளது.தற்போது அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனாவை நாய்களின் மோப்ப சக்தி மூலமாக கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வரிசையில், வாசனையை வைத்து கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் பிரான்சில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆல்போர்ட் தேசிய கால்நடை பயிற்சி பள்ளியில், கொரோனா நோயாளி, நோய் தொற்று இல்லாத நபரின் வியர்வை மாதிரி நாய்களுக்கு அளிக்கப்படுகிறது. அதில் கொரோனா நோயாளியின் வியர்வையை சரியாக கண்டறியும் நாய்களுக்கு பொம்மை பரிசாக வழங்கப்படுகிறது.கொரோனா நோயாளியின் வியர்வையில் இருந்து வரும் தனித்துவமான வாசனை மூலம் நோய் தொற்றை உறுதி செய்வதில் 86 சதவீத வெற்றியடைந்துள்ளதாகவும், இந்த பரிசோதனை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் டொமினிக் கிராண்ட்ஜீன் குறிப்பிட்டுள்ளார். 

மூலக்கதை