சீனாவில் கொரோனா களத்தில் பணியாற்றிய 100 ஜோடிகளின் திருமணம்; நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருமணத்தை கண்டு ரசித்த 28 கோடி பேர்

தினகரன்  தினகரன்
சீனாவில் கொரோனா களத்தில் பணியாற்றிய 100 ஜோடிகளின் திருமணம்; நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருமணத்தை கண்டு ரசித்த 28 கோடி பேர்

பெய்ஜிங்: கொரோனா ககளத்தில் முன்னின்று பணியாற்றிய 100 ஜோடிகளின் திருமணம் சீனாவில் நடைபெற்றது.  சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போதும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரசால் 82,919 பேர் பாதித்துள்ளனர். இதுவரையில் 4,633 பேர் பலியாகி உள்ளனர். உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் சீனாவில் டாக்டர்கள், தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவிய காலக்கட்டத்தில் திருமணம் நிச்சயித்திருந்த பதர்த்தங்களில் ஒத்திவைக்க நேர்ந்தது. அவ்வாறு திருமணத்தை ஒத்திவைத்து கொரோனா களத்தில் முன்னின்று பணியாற்றிய மருத்தவ ஊழியர்கள் காவலர்கள் உள்ளிட்ட 100 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நேரலையில் ஒளிபரப்பப்பட்டு 100 ஜோடிகளின் திருமணத்தை 28 கோடி பேர் கண்டு ரசித்தனர்.

மூலக்கதை