16,500 கோடி நிதியுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதி

தினகரன்  தினகரன்
16,500 கோடி நிதியுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதி

கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், இந்தியாவுக்கு 16,500 கோடி நிதியுதவி வழங்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகாவா உறுதி அளித்துள்ளார். நிர்மலா சீதாராமனிடம் பேசிய அவர், ‘‘அவசர காலத்தில் இந்தியாவுக்கு உதவ ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி பூண்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறைக்கு உடனடியாக  16,500 கோடி வழங்க உள்ளோம். அதோடு, கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ஏழைகள், முறைசாரா பணியாளர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில்துறைகள், நிதித்துறைக்கு உதவ உள்ளோம். தேவைப்பட்டால் இந்தியாவுக்கு மேலும் கூடுதலாக நிதியுதவி வழங்கப்படும். அவசரகால உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள், பட்ஜெட் ஆதரவாக இந்தியாவுக்கு அனைத்து வகையான நிதி ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

மூலக்கதை