கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ.1898 கோடியை நிவாரண நிதியாக வழங்கியது டிக்டாக் நிறுவனம்

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ.1898 கோடியை நிவாரண நிதியாக வழங்கியது டிக்டாக் நிறுவனம்

கல்வர் சிட்டி: கொரோனா வைரஸ் பாதிப்பு உலக முழுவதும் அதிக அளவில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் 250 மில்லியன் டாலரை கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக தர உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இந்தியா மதிப்பில் ரூ.1898 கோடி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும்  200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் உள்பட உலக நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன.உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் டிக்டாக் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த செயலி மீது இளைஞர்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்தச் செயலியை எதிர்ப்பவர்களும் உண்டு. பல சமூக சீர்கேட்டிற்கு இது காரணமாக உள்ளது எனக் கூறி நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன. இந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நிவாரணங்களுக்காக 150 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும். மேலும் மற்றொரு 40 மில்லியன் டாலர், டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்படும். ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என கூறியுள்ளது. அதனை தொடர்ந்து உலகெங்கிலும் தொலைதூர கற்றல் முயற்சிகளை ஆதரிக்க \'படைப்பு கற்றல் நிதிக்கு\' மற்றொரு 50 மில்லியன் டாலர் பயன்படுத்தப்படும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிதி அமெரிக்காவில் உள்ள நோய்கள் கட்டுப்பாட்டு மையங்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு ஏஜென்சி மூலம் செலவு செய்யப்பட உள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை