உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா..: இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6,761ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6761-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆனது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பற்றமாக மகாராஷ்டிராவில் 1,364 பேரும், டெல்லியில் 898 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேரும், அமெரிக்காவில் 16,697 பேரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 16,19,617 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,65,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியதாவது; கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை