கொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது

தினகரன்  தினகரன்
கொரோனா பரவல் தடுப்பதில் முன்னோடி மாநிலம் கேரளா..: தென்கொரிய மாதிரியை பின்பற்றி பரவலை கட்டுப்படுத்தியது

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான கேரளா, சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி முன்னோடி மாநிலமாக பல்வேறு தரப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கேரளாவில் ஜனவரி 30-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு முடிக்கிவிட்டது. தென்கொரிய முன்மாதிரியை பின்பற்றி மக்களை தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா அறிகுறி இருப்பவர்கள் சோதனை செய்யப்பட்டனர். தற்காப்பு கருவிகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுவதால், எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிமுறைகள் கையாளப்பட்டது. இது கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்தியதுடன் மருத்துவ பணியாளருக்கு கொரோனா பரவுவதையும் தடுத்தது. நாடு தழுவிய ஊரடங்கு அமலானதுமே முதல் மாநிலமான கேரள அரசு ரூ.20 000 கோடி-க்கு நிவாரண உதவிகளை அறிவித்து, உணவு பொருட்களை வீடுத் தேடி சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட்டம் குறைந்ததால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக அடையாளம் கட்டப்பட்ட கேரளா இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை தேசிய ஊடங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

மூலக்கதை